செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை சிந்து வெளியும் தமிழர் நாகரிகமும்!

சிந்து வெளியும் தமிழர் நாகரிகமும்!

5 minutes read
சிந்துச் சமவெளி நாகரிகம் 5,000 ஆண்டுகள் தொன்மையானது. அந்த  நாகரிகத்தின் காலத்தில் இருந்த எகிப்திய, சுமேரிய மற்றும் மெசபடோமிய நாகரிகங்கள் நன்கு அறியப்பட்டவை. இது இருந்த விரிந்த பரப்பு, ஏறத்தாழ ஒரு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள். ஆரியர் வருகைக்கு முன்பே இந்தியாவில் ஒரு சிறந்த நாகரிகம் நிலவியது என்று ஆய்வாளர்களால் அறியப்பட்டது. சிந்து நதிக்கருகே சிந்து நதியின் கிளைநதியான ரவி ஆற்றங்கரையில் அரப்பா அமைந்துள்ளது. சர் ஜான் மார்ஷல், ஹீராசு பாதிரியார், ஆர்.டி .பானர்ஜி, ஜி.ஆர்.ஹண்டர் ஆகியோர் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு தம் கருத்துகளைப் பதிவேற்றினர்.

மரபணு வழி ஆய்வு முடிவு: 
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க த1ஹ என்ற ஆண்பால்  (வ) ஆய்வு, ஆரியர் வருகையும், சிந்துவெளி மக்கள் அழிவும் ஏறத்தாழ ஒரே கால கட்டத்தைச் சேர்ந்தவை என்பதை காட்டுகிறது. The phylogenetic and geographic structure of Y#chromosome haplogroup R1a  – என்ற “y’ – ஆண்பால்  மரபணு வழி காலக் கணக்கீடு   முடிவை அறிவியல் இதழான  “BMC Evolutionary Biology’   மார்ச்சு 2017 இதழில் வெளியிட்டார்கள்.
தமிழரின் சிந்துவெளி நாகரிக அழிவின் பின்னால், கி.மு.2000 – கி.மு. 1500-க்கு இடைப்பட்ட காலத்தே இந்தோ ஆரிய மொழி பேசும் மக்கள் கூட்டம், சமஸ்க்ருத மொழியுடன் தனித்துவப் பண்பாட்டுடன் இந்தியத் துணைக் கண்டத்திற்குள் இடம்பெயர்ந்தார்கள் என்கிறது இவ்வாய்வு.
இந்த முடிவானது, வரலாற்றைத் திரித்து மொழி, இனம், பண்பாடு, வரலாறு ஆகியனவற்றை அழித்து இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்க நினைக்கும் ஆதிக்க சக்திகளுக்கு சரியான அடி. ஆனாலும் விடுவரோ தம் பணியை? 2000 ஆண்டுகால தொடர் இடர் அல்லவா

பாகிஸ்தான் அரசின் தொல்லியல் ஆய்வு முடிவுகள்
தொன்ம ஆசியா என்ற கட்டுரை 08-10-2014-ல் பக்கம் 5-ல் தெற்கு ஆசிய தொல்லியல் நிறுவன இதழில் வெளிவந்த பாகிஸ்தானிய புதிய ஆய்வுகளும் புதிய தரவுகளும்  எண் : 16(2): 21-39- ல் வெளியிடப்பட்டுள்ளது.
சிந்துவெளி நாகரிகம் ஏனைய சுமேரிய, எகிப்திய, மெசபடோமிய நாகரிகங்களைவிட பெரியதும் பழைமையானதும் ஆகும் என்ற முடிவுக்கு இவ்வாய்வு இட்டுச்செல்கிறது.
சுமேரிய, எகிப்து, மெசபடோமிய நாகரிகங்களுக்கு மூத்ததும் பெரியதுமான நாகரிகம் சிந்துவெளி நாகரிகமே. இவர்களுடன் கடல் வணிகம் கொண்டிலங்கினர் சிந்துவெளியினர். அதற்குப் பயன்பட்டவையே இந்த முத்திரைகள். இவை சிந்துவெளியைத் தவிர அந்த இடங்களிலும் காணப்பெற்றன.

சிந்துவெளி தமிழ் வெளியே 
சிந்து நாகரிக மக்கள் இன்று தென்இந்தியாவில் வசிக்கும் மக்களின் முன்னோர்கள் ஆவர். வடக்கில் திருந்தாத் தமிழ் மொழியாகிய, பிராகுயி மொழி பேசும் மக்கள் ஆஃப்கானிஸ்தானுக்கு அருகில் இன்றும் இருக்கிறார்கள். முன்னொரு காலத்தில் இந்தியா முழுவதும் தமிழ்மொழி பேசப்பட்டது, அதனால், சிந்து நாகரிகம் தமிழ் நாகரிகம் என்பதனை பல ஆய்வுகள் உறுதிசெய்கின்றன .
ஜவகர்லால் நேரு 
தனது “டிசுகவரி ஆப் இந்தியா’ என்ற தன் நூலில் சிந்துவெளி நாகரிகம் தமிழர் தம் நாகரிகமே எனக் கூறுகிறார் ஜவஹர்லால் நேரு. ஊர் என முடியும் நகரங்களைக் கொண்டது சிந்துவெளி நாகரிகம். “ஊர்’ என்ற வேர்ச் சொல் தமிழ்ச் சொல்லாகும் என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஆரிய  நாகரித்தின்  சுவடே அங்கில்லை எனவும் சொல்கிறார்.

ஆர். பாலகிருட்டிணனின் ஆய்வு
நேருவின் கூற்றை ஆர். பாலகிருட்டிணன் எனும் இந்திய ஆட்சிப் பணியாளர், சிந்துவெளி இன்றைய மே.பாகிஸ்தான், ஈரான், ஆப்கான் எல்லை ஆகிய இடங்களில்  பழந்தமிழ் ஊர்ப்பெயர்கள் உள்ளன என்று ஆய்வின்வழி நிறுவினார்.

சிந்துவெளியில் தமிழரின் நகரக் கட்டமைப்பு
குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில் 5000- ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு.3300 கி.மு 1300) பழைமையான சிந்துவெளி நாகரிகம் நகரமைப்புகளைக் கொண்டது. ஊருக்கு மேற்கே  .30 – 50 உயரமுள்ள சுவர்கள், 1200 ஷ் 600 மேடை, வரிசையான வீடுகள், தெருக்கள், செங்கற்களால் மூடிய சாக்கடைகள் என இன்றைய நகரின் கட்டமைப்பிற்கு இணையான நகரங்களைக் கொண்டதே சிந்துவெளி நாகரிகம். 30 அடி அகலமுள்ள திட்டமிட்ட நேர் நேரான தெருக்களும், குறுகலான சந்துகளும் கொண்ட ஊர்கள்.
அன்றைக்கே இருந்திருக்கின்றன.

சிந்துவெளி நாகரிகமும் மொழி இலக்கணமும்                                                      
வாசிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இராசேச்வர ராவ்,  ஒரு கணினி நரம்பியல் அறிவியலாளர் (Computing Neurologist)  ஆவார். அவர் சிந்துவெளி எழுத்துகளை கணினி உதவிகொண்டு ஒரு மொழிக்குரிய முழு இலக்கணம் கொண்டது என்கிறார்.
5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த எழுத்துக்கள் எழுதப்பட்ட முறை. பெரும்பாலும் இதை வலமிருந்து இடமாக எழுதியிருக்கிறது.

சிந்து வரிவடிவத்தில், மொழிகளுக்குரிய அமைப்பு காணப்படுகிறது. கிடைத்த சிந்து வரிவடிவங்கள் பல சிதைந்த நிலையில் உள்ளன. கணினியின் துணைகொண்டு இதனை முழுமை செய்து சரியான, பொருத்தமான வரிவடிவத்தை ஊகிக்க முடிந்தது.

மொழி எழுத்துகள் இலக்கணமும் 
சிந்து வெளி மொழியும் 
தட்டச்சினால் ஒரு ஒழுங்குமுறையின்றி தாறுமாறாக தட்டச்சு செய்யும் எழுத்துக்கள் தாறுமாறாக பொருளின்றி இருக்கும். இது உயர்நிலை இயல்பாற்றல்(High entropy) ஆகும். விசைப்பலகையில் சிக்கல் ஏற்படின் தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஒரே எழுத்து வரும். இதனைக் கீழ்நிலை இயல்பாற்றல்  (Low entropy) எனக் கூறலாம்.
ஒரு மொழியின் இயல்பாற்றல் இடைப்பட்ட நிலையில் (Intermediate Entropy) இருக்கும். சிந்துவெளி எழுத்துகளில் மொழிக் கூறுகளின் இலக்கணம் உள்ளது .
சிந்து வரிவடிவத்தின் முறை இயல்பாற்றலைக் காண்பிக்கிறது. சிந்து வரிவடிவங்கள் ஒரு மொழியின் தன்மையைக் கொண்டிருப்பதால் ஒரு மொழியின் வரிவடிவங்களே.

சிந்துவெளி கடல் வணிகம்
சிந்துச்சமவெளி மக்கள் தொலைதூரத்தில் வாழ்ந்தவர்களுடன் கடல் வழி சென்று  இன்றைய ஈராக், மெசபொட்டாமியா வரை சென்றிருக்கிறார்கள். சிந்துவெளி  வணிகர்கள் பிற மொழியை எழுத தங்கள் எழுத்தையே பயன்படுத்தி இருக்கிறார்கள்.

வரிவடிவங்களும் தமிழ் மொழியும்
ஐராவதம் மகாதேவனும் அஸ்கோ பார்போலாவும் சில முடிவுகளைக் கண்டனர்.
பார்போலாவின் பணியில் இருந்து ஒரு எடுத்துக் காட்டு: ஒரு சிறிய வரியிது. இதில் செங்குத்தான ஏழு கோடுகளைத் தொடர்ந்து மீனைப் போன்ற சின்னம் உள்ளது. இந்த முத்திரை சரக்குகளின் களிமண் சீட்டுகளில் அச்சு வைக்க பயன்படுத்தப் பட்டன. எனவே  வணிகர்களின் பெயர்களைக் குறிக்கலாம்.
நம்  பண்பாட்டின் அடிப்படையில், பிறக்கும் நேரத்தில் வானில் உள்ள கோள்களின் நிலையை பொறுத்து பெயர் வைப்பது உண்டு. தமிழில்  மீன் என்ற சொல் விண்மீன் என்ற பொருளிலும் வரும். இரு மீன்கள் வெள்ளிக் கோளைக் குறிக்கும்.
அதுபோலவே ஆறு விண்மீன்களின் தொடர் அறுமீன் ஆகும்.  அத்துடன் ஏழு விண்மீன்கள் என்பது ‘எழுமீன்’ என்பதாகும்.  இந்த முத்திரைகள் தமிழ்ப்  பெயர்களை, அதிலும் கோள்களையும் விண்மீன்களையும் அடிப்படையாகக் கொண்ட பெயர்களைக் குறிக்கிறது.

இரா.மதிவாணன் சிந்துவெளி எழுத்தாய்வு 
இதுபோன்று பல வரிகளை இரா. மதிவாணன் ஆய்ந்து சிந்துவெளிக் குறியீடுகளைப் பற்றிய நூல் எழுதியுள்ளார். மாணவர்களுக்கு சிந்து வெளி எழுத்துகள் பற்றி விளக்கிச் சொல்கிறார் . தமிழ் மொழிக்கும் சிந்து வெளிக் குறியீடுகளுக்கும் உள்ள தொடர்புகளை நிறுவுகிறார்.
ஆக சிந்து வெளியை தமிழர் நாகரிகம் என்றே கூறலாம்.

நன்றி : தஞ்சை கோ.கண்ணன் | நக்கீரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More