கனடாவில் 14 வயது சிறுமியை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் மீது மேலும் சில வழக்குகள் பாய்ந்துள்ளது.
Cape Breton தீவை சேர்ந்த 14 வயது சிறுமி ஒரு வாரத்துக்கு மேலாக காணாமல் போனார்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை Darcy Doyle (47) என்பவருடன் சிறுமி இருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சிறுமியை கடத்தியதாக Darcy Doyleஐ கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட Darcy Doyle நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் செப்டம்பர் 2ஆம் திகதி வரை அவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையில் அதிகாரியை எதிர்த்து நடந்து கொண்டதாக இன்னும் இரண்டு வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ளது.
மேலும் கடந்தாண்டு டிசம்பரில் சிலரை தாக்கிய வழக்கும் Darcy Doyle மீது சேர்க்கப்பட்டுள்ளது.