இங்கிலாந்திற்கான அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எதிராக சுவீடன் தனது ஆலோசனையை புதிய்த்துள்ளது.
இந்த மாற்றம் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு வரும் என சுவீடன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, பிரித்தானியா அதன் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து சுவீடனை நீக்கிய பின்னணியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அயர்லாந்து, பின்லாந்து, மால்டா உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், ஐரோப்பிய நாடுகளுக்கான பயண எச்சரிக்கைகளில் பெரும்பாலானவற்றை நீக்கியுள்ளதாக சுவீடன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிய நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 3,000 க்கு மேல் பதிவாகியமை சுட்டிக்காட்டத்தக்கது