0

கட்டுநாயக்கவில் விடுதியொன்றில் பதினேழு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
குறித்த விடுதியைச் சேர்ந்த நோய்த் தொற்றாளர்கள் அனைவரும் விடுதிக்கு உள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விடுதியில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 17 பேர் உள்ளிட்ட 57 பேர் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் அதிகளவானவர்கள் கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தின் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.