குவைத் நாட்டிற்கான புதிய பிரதமராக ஷேக் சபா கலீத் அல்ஹமத் அல்சபா நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசர் ஷேக் நவாப் அல்அஹ்மத் அல்ஜாபர் அல்சபாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது.
குவைத் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் ஷேக் சபா கலீத் அல்-ஹமாத் அல்-சபா தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து குவைத்தின் அரசர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா பிரதமர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்நிலையில் குவைத்தின் புதிய பிரதமராக ஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-சபாவை நியமித்து அரசர் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் அரசர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவை சந்தித்து கலீத் அல் ஹமத் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக கலீத் அல் ஹமத் வெளியுறவுத் துறை அமைச்சராக செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.