அமெரிக்கர்கள் அனைவருக்கும் ஜூலைக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் 60 கோடி அளவுக்கு தடுப்பு மருந்து இருப்பு இருக்கும் என்றார்.
ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு போதுமான அளவுக்கு மருந்து கையிருப்பில் வைக்கப்படுமென அவர் கூறினார்.
குழந்தைகள் விரைவில் பள்ளிகளுக்கு திரும்ப விரும்புவதாகவும், அடுத்த கிறிஸ்துமசுக்குள் இயல்புநிலை திரும்பும் என்றும் அவர் தெரிவித்தார்.