செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ‘ஊய்குர் முஸ்லிம்கள்’ பற்றிய கதையாடல்களுக்கு சமூக ஊடகங்களில் சீனா விதிப்பு

‘ஊய்குர் முஸ்லிம்கள்’ பற்றிய கதையாடல்களுக்கு சமூக ஊடகங்களில் சீனா விதிப்பு

1 minutes read

சீனாவின் ஜின்ஜியாங்கில் உள்ள உய்குர்களுக்கு எதிராக நடந்து வரும் மனித உரிமை மீறல் மற்றும் ஹொங்கொங்கில் முன்னெடுக்கப்படும் ஜனநாயக சார்பு போராட்டங்கள் போன்ற விடயங்களை மையப்படுத்திய அரசியல் தலைப்புகளைப் பற்றி கலந்துரையாடுவதற்கு சீன மக்களுக்கு சமூக ஊடகச் செயலியொன்று வாய்ப்பொன்றை பெற்றுக்கொடுத்திருந்தது.

ஆனாலும் அந்த வாய்ப்பு நீண்டகாலத்திற்கு நீடித்திருக்கவில்லை. சொற்பகாலத்திற்குள்ளேயே அது தடைசெய்யப்பட்டுவிட்டது.

சி.என்.என் செய்தி முகவரகத்தின் அறிக்கையின் படி சீனாவில் பிற தளங்களில் பல முக்கிய பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்படி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்ட செயலியானது பலரின் பயன்பாட்டுத் தளமாக மாறியதை அடுத்து சில நாட்களில் தடுக்கப்பட்டு விட்டது. 

குறிப்பாக  வார இறுதியில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக மிகப் பெரிய சீன மொழியிலான அரட்டை அறைகள் ( chat boxs )அமைக்கப்பட்டுள்ளன.

இதில் அங்குள்ள மக்கள் பல விடயங்களைப் பற்றியும் ஆராய்வதுவழமையானது. அவ்விதமானதொரு கலந்துரையாடல் செயலியிலேயே அங்கு மக்கள் மிகவும் பரபரப்படைந்திருந்த அரசியல் ரீதியான தலைப்புகளான ஜின்ஜியாங்கில் உள்ள உய்குர்களுக்கு எதிராக நடந்து வரும் ஒடுக்குமுறை,ஹொங்கொங்கில் ஜனநாயகம் மற்றும் இறையாண்மை மீறப்படுதல், தாய்வானுக்கு விடுக்கப்பட்டு வரும் எச்சரிக்கைகள் குறித்து அதிகளவில் ஈடுபாட்டினைக் காட்டியிருந்தனர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More