செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஆப்கானியர்கள் வெளியேற தொடர்ந்தும் உதவி – அமெரிக்கா

ஆப்கானியர்கள் வெளியேற தொடர்ந்தும் உதவி – அமெரிக்கா

1 minutes read

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்ற வணிக விமானங்கள் உதவும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

A US Marine and a child spray water at each other during an evacuation at Hamid Karzai International Airport, Kabul, Afghanistan, 21 August 2021

அதன்படி பதினெட்டு விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்கு வெளியே உள்ள பாதுகாப்பான தளங்களில் இருந்து மக்களை மூன்றாம் நாடுகளுக்கு மாற்றும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 15 அன்று தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டை விட்டு காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பல ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் குவிந்துள்ளனர்.

கடந்த வாரத்தில் அமெரிக்கா கிட்டத்தட்ட 28,000 மக்களை வெளியேற்றியதாக ஜனாதிபதி ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் குறைந்தது 20 பேர் இறந்துள்ளனர் என்று நேட்டோ அதிகாரியொருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிபடுத்தியுள்ளார்.

அவர்களில் சிலர் நெரிசால் உடல் நசுங்கி பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 31 க்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து வியத்தகு வெளியேற்றத்தை இறுதி செய்ய திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

இதேவ‍ேளை ஆகஸ்ட் 13 முதல் பிரிட்டன் 5,725 பேரை வெளியேற்றியுள்ளது என்று அந் நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தாமதமாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More