ஆப்கானிஸ்தான் – குண்டூஸ் பகுதியிலுள்ள மசூதியில் நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் உள்ள நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை தண்டிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் பாராளுமன்றத்தில் ஆற்றிய சிறப்பு உரையின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடமைப்பட்டிருக்கின்றோம். துயர நிகழ்வின் பின்னணியில் உள்ளவர்களை தண்டிக்கப்பட வேண்டும். இதில் மாற்று கருத்து இல்லை.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அமெரிக்க ஆதரவு பயங்கரவாத குழுக்கள் மத மற்றும் இன முரண்பாடுகளை விதைக்கின்றன. இவை குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
ஷியா மசூதி மீதான கொடிய தாக்குதலுக்கு ஐஎஸ் ஐஎஸ் கே எனப்படும் இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ளது.
காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலுக்குப் பிறகு இந்த குழுவின் மிக மோசமான தாக்குதல் இதுவாகும் என குறிப்பிடப்படுகின்றது.