எக்குவடோரின் பெனிடென்சியாரியா டெல் லிட்டோரல் சிறைச்சாலையில் ஒரே இரவில் நடந்த வன்முறையில் குறைந்தது 68 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு டஜனுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் போதைப்பொருள் போட்டி கும்பல்களுக்கும் இடையிலான மோதலின் விளைாவக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தெற்கு நகரமான குயாகுவிலில் அமைந்துள்ள இந்த சிறைச்சாலை, நாட்டின் மிக மோசமான சிறை வன்முறை சம்பவத்தில் செப்டம்பர் மாத இறுதியில் 119 கைதிகள் கொல்லப்பட்ட அதே சிறைச்சாலையாகும்.
வன்முறையினை அடுத்து டஜன் கணக்கான மக்கள் சிறைக்கு வெளியே கூடி, தங்கள் உறவினர்கள் தொடர்பான செய்திகளுக்காகக் காத்திருந்தனர்.