செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபடுவோரை பாகிஸ்தான் விட்டுவைக்காது – இம்ரான் கான் சபதம்

மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபடுவோரை பாகிஸ்தான் விட்டுவைக்காது – இம்ரான் கான் சபதம்

1 minutes read

இஸ்லாம் அல்லது நபி (ஸல்) அவர்களின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் விட்டுவைக்காது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செவ்வாயன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Image

சியால்கோட்டில் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜையான பிரியந்த குமாரவுக்கு இஸ்லாமபாத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இம்ரான் கான் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந் நிகழ்வில் பாகிஸ்தான் மத்திய அமைச்சரவை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இதன்போது பிரியந்த குமாரவின் திருவுருவப் படத்துக்கு இம்ரான் கான் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அத்துடன் பிரியந்த குமாவின் உயிரைக் காப்பாற்ற முயன்ற தொழிற்சாலையின் சக ஊழியரான மாலிக் அட்னானுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

Prime Minister Imran Khan awards Malik Adnan a certificate of appreciation. — Photo courtesy: PMO Twitter

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More