உக்ரைன் நாட்டில் பணி புரிந்த அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவர் Kyiv புறநகர் பகுதியான இர்பின் (Irpin) நகரில் வைத்து சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
50 வயதான ஊடகவியலாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான Brent Renaud என்பவரே இதன்போது கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் ரஷ்ய படையினரால் இலக்கு வைக்கப்பட்டதாகவும் இதன்போது காயமடைந்த மேலும் இரு ஊடகவியலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் Kyiv பொலிஸ் உயரதிகாரி Andriy Nebytov தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரில் கொல்லப்பட்ட முதலாவது ஊடகவியலாளரின் மரணம் இதுவென கூறப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டின் போது தாம் அமெரிக்க ஊடகவியலாளருடன் இருந்ததாக சம்பவத்தில் காயமடைந்த மற்றைய ஊடகவியலாளர் இத்தாலிய செய்தியாளர் ஒருவருக்கு கூறியுள்ளார்.