பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவுக்கு அருகில் பல வீடுகளில் பரவிய தீயில் ஆறு சிறுவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றுக் காலை ஏற்பட்ட இந்தத் தீயில் 80 வீடுகள் அழிந்துள்ளன. கியுசோன் நகரில் உள்ள பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் பரந்த வளாகத்திற்குள் இருக்கும் சனநெரிசல் கொண்ட குடியிருப்பு ஒன்றின் இரண்டாவது மாடியிலேயே இந்தத் தீ ஆரம்பித்துள்ளது.
தீக்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை.
தீயை அணைப்பதற்கு சுமார் இரண்டு மணி நேரம் எடுத்துக்கொண்டதாக மூத்த தீயணைப்பு அதிகாரி கரேக் பிச்சயாடா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.