டொமினிக்கன் குடியரசின் சுற்றாடல் மற்றும் இயற்கை வளத் துறை அமைச்சர் ஓர்லான்டோ ஜோர்ஜ் மேரா தனது அலுவலகத்தில் வைத்து நெருங்கிய நண்பரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்த வேளையிலேயே தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார். அவரது தலையில் குறைந்தது ஆறு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. ஜனாதிபதி பேச்சாளர் ஒருவர் என கூறப்படும் அமைச்சரின் பால்ய நண்பரான மிகுவேல் க்ரூஸ் என்பவரே தாக்குதலை நடத்தியுள்ளார். அவர் தற்போது தடுப்புக்காவலில் உள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவில்லை.
55 வயதான ஜோர்ஜ் மேரா முன்னாள் ஜனாதிபதி சல்வாடோர் ஜோர்ஜ் பிளன்கோவின் மகனாவார். அவரது மனைவி டொமினிக்கன் குடியரசுக்கான பிரேசில் தூதுவராகவும் இரு மகன்களில் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.