ஈக்குவடோரில் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எரிபொருட்களின் விலையை குறைத்தல், விவசாய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஈக்குவடோரின் தலைநகர் குய்ட்டோவுக்கு வருகை தருவதற்கான சுமார் 20 பிரதான வீதிகளை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டயர்களை எரித்தும் மரக்குற்றிகளால் வீதியை மறித்தும் நள்ளிரவு முதல் மக்கள் எதிர்ப்பில் ஈடுப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.