இவ்வாண்டில் இதுவரை ஒரு மில்லியன் பேர் கொவிட்–19 நோய்த்தொற்றால் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நோய்ப்பரவல் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை கொவிட் தொற்றால் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6.4 மில்லியன் ஆனது. அது வருத்தமளிக்கும் மைல்கல் என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டது.
சுகாதாரத்துறை ஊழியர்கள், மூத்தோர், எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் ஆகியோருக்குத் தடுப்பூசி போட அரசாங்கங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டது. இவ்வாண்டு ஜூன் மாதத்துக்குள் அனைத்து நாடுகளிலும் குறைந்தது 70 வீதத்தினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள அந்த அமைப்பு இலக்கு நிர்ணயித்திருந்தது.
ஆனால் 130 நாடுகள் இன்னும் அந்த இலக்கை எட்டவில்லை. உலக மக்கள்தொகையில் சுமார் 33 வீதத்தினர் இன்னும் கொவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.