புருணை சுல்தான் ஹசனல் போல்கியா உலகில் நீண்ட காலத்திற்கு ஆட்சி செய்துவரும் மன்னராகியுள்ளார் பிரிட்டனின் எலிசபெத் மகாராணி காலமானதை அடுத்து இவ்விடத்தை பிடித்துள்ளார்
1967ஆம் ஆண்டு மன்னரான அவர் சுமார் 55 ஆண்டுகளாக ஆட்சி செய்துவருவதாக பெர்னாமா செய்தி நிறுவனம் கூறியது.
எலிசபெத் மகாராணியின் ஆட்சி 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. கடந்த வியாழக்கிழமை (08) அவர் காலமானார். அவரின் பூதவுடலை தாங்கிய பேழை ஸ்கொட்லந்தில் உள்ள பால்மோரலிலிருந்து நகரங்கள், கிராமங்கள் வழி கொண்டு செல்லப்பட்டு வருகிறது. எலிசபெத் மகாராணியின் மகனான இளவரசர் சார்ல்ஸ் பிரிட்டனின் புதிய மன்னராக அரியணை ஏறியுள்ளார்.