ஈரானில் பொலீஸ் காவலில் இளம்பெண் மஹ்சஸா அமினி உயிரிழந்ததை கண்டித்து, கிரீசில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 2 பெண்கள் தலைமுடியை வெட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
டெஹ்ரானில் முறையாக ஹிஜாப் அணியவில்லை என கூறி விசாரணைக்கு பொலீசாரால் அழைத்து செல்லப்பட்ட இளம்பெண் அமினி பரிதாபமாக பலியானார்.
இதை கண்டித்து ஈரானில் நடைபெற்ற போராட்டங்களில் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் ஈரான் பெண்களுக்கு ஆதரவாக ஏதென்சில் வாழும் ஈரானியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் இளைஞர் ஒருவரும், 2 இளம்பெண்களும் தலைமுடியை வெட்டியதோடு, ஹிஜாப்பையும் தீயிட்டு எரித்தனர்.