0
ஆப்கானிஸ்தான் கலாசாரம், சர்வதேச கல்வித் தரம் மற்றும் இஸ்லாமியச் சட்டங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாடசாலைப் பாடத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யவும், திருத்தவும் திட்டமிட்டுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஆப்கானிஸ்தான் உயர்கல்வி அமைச்சின் தலிபான் பேச்சாளர் அஹ்மத் தக்கி குறிப்பிடுகையில், 35 கல்விப் பாடத்திட்டங்கள் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆப்கான் முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.