பங்களாதேஷில் ஹிந்து பக்தர்களை ஏற்றிய படகு ஒன்று ஆற்றில் மூழ்கியதில் குறைந்தது 32 பேர் உயிரிழந்திருப்பதோடு டஜன் கணக்கானோர் காணாமல்போயுள்ளனர்.
பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுவர்களை நிரப்பிய படகு பிரபல கோயில் ஒன்றுக்கு செல்லும் வழியில் கரடோயா ஆற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்துள்ளது.
இந்தப் படகில் சுமார் 90 பேர் இருந்திருப்பதோடு, கிட்டத்தட்ட அறுபது பேர் தொடர்ந்தும் காணாமல்போயிருப்பதாக மாவட்ட பொலிஸ் தலைவர் சிராஜுல் ஹுதா குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட உடல்களில் 16 பெண்கள் மற்றும் 10 சிறுவர்கள் இருப்பதாக பஞ்சகிர் மாவட்ட நிர்வாகி ஜஹுருல் இஸ்லாம் தெரிவித்தார். காணாமல்போனோர் தொடர்பில் விபரங்களை சேகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.