கம்போடியாவின் மனிதக் கடத்தல் மற்றும் ஒரு கட்சி ஆட்சியை ஐ.நா நியமித்த மனித உரிமை நிபுணர்கள் விமர்சித்த நிலையில் ஐக்கிய நாடுகளுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி சென் சூ அந்நாட்டை காத்துப் பேசியுள்ளார்.
“கம்போடியா அண்மைய ஆண்டுகளில் தேசிய வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார அபிவிருத்தியை பேணி வருகிறது. மக்களின் வாழ்க்கைத் தரம் படிப்படியாக மேம்பட்டு வரும் அதேநேரம் மனித உரிமை பாதுகாக்கப்படுகிறது” என்று ஜெனீவாவில் நடந்த மனித உரிமை பேரவை கூட்டத்தில் சென் சூ தெரிவித்தார்.