செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஒருவருடன் ஒருவர் பேசுவதற்கு இந்திய கிராமம் எடுத்த புதிய முயற்சி

ஒருவருடன் ஒருவர் பேசுவதற்கு இந்திய கிராமம் எடுத்த புதிய முயற்சி

1 minutes read

அரிஸ்டோட்டில் கூறியதுபோல் மனிதன் ஒரு சமூக விலங்கு. ஏனெனில் மனிதன் தனது தேவைகளை பூர்த்தி செய்ய சமூகத்தை நாடி இருக்க வேண்டி இருந்தது.

இந்நிலையில், இன்றைய மனிதன் தனிமையை விரும்பி செல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணம் இணைய பாவனை ஆகும்.

இணைய பாவனை  கொவிட் தொற்று காரணமாக  வீட்டுப்பொருட்கள் வாங்குவது முதல்,  கல்வி நடவடிக்கை வரை அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தியது.

இதன் விளைவால் மனிதன் இணைய பாவனைக்கு அடிமையாகினான்.

இவ்வாறு இணையத்திற்கு அடிமையான மனித சமூகத்தை மீட்டெடுக்க இந்தியாவில் மகராஷ்ட்ரா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி மற்றும் கைப்பேசியுடான இணைய பாவனை ஆகிய இரண்டு நவீன கால போதைகளிலிருந்து “சுதந்திரம்” என்று அறிவித்துள்ளது. 

அதாவது, ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் இணைய முடக்கத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒருவருடன் ஒருவர் பேசுவதற்கு நேரத்ததை செலவிட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாங்லி மாவட்டத்தில் உள்ள வட்காவ்ன் கிராமத்தில் தினமும் மாலை 7 மணிக்கு சைரன் ஒலி எழுப்பப்படும் அப்போது குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்கள் தொலைக்காட்சி மற்றும் கைபேசி இணைய பாவனை நிறுத்த வேண்டும்.

இரவு 8.30 மணிக்கு மீண்டும் கிராம சபை சைரன் ஒலியை நிறுத்தும் போது   இரண்டு கருவிகளையும் இயக்கலாம்.

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14 அன்று நடந்த கிராமக் கூட்டத்தில் நாங்கள் இந்த போதை பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்தோம்.

அடுத்த நாளிலிருந்து, சைரன் ஒலித்தவுடன் அனைத்து தொலைக்காட்சி மற்றும் கைப்பேசி இணைய பாவனை நிறுத்தப்பட்டன என கிராம சபையின் தலைவர் விஜய் மோஹிதே தெரிவித்தார். 

வட்கானில் சுமார் 3,000 மக்கள் வசிக்கின்றனர், இதில் பெரும்பாலும் விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உள்ளமை குறிப்படத்தக்கது.

நன்றி – பிபிசி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More