உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு பகுதிகளில், ஒரே நாளில் 80க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி, ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில், பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
கிரீமியாவை, ரஷ்யாவுடன் இணைக்கும் பாலம் தகர்க்கப்பட்டதற்கு, உக்ரைன் மீது குற்றஞ்சாட்டிய ரஷ்யா, அதற்கு பதிலடியாக திங்கட்கிழமை அன்று, அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி, பயங்கர தாக்குதல் நடத்தியது.
அன்றைய தினமே 11 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.