கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தில் இடம்பெற்ற விண்கல் தாக்குதல் மற்றும் அதனால் ஏற்பட்ட பாரிய பள்ளத்தை நாசா கண்டுபிடித்துள்ளது.அப்பள்ளமானது சுமார் 500 அடியாக உள்ளது விஞ்ஞானிகள் ‘ஜெர்னல் சயன்ஸ்’ சஞ்சிகைக்கு தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட 4 ரிச்டர் அளவு நில அதிர்வை விண்கல் தாக்கிய இடத்தில் இருந்து 2,200 மைல்களுக்கு அப்பால் இருக்கும் நாசாவின் இன்சைட் விண்கலம் உணர்ந்துள்ளது.
இவ்வாறு செவ்வாயை தாக்கி இருக்கும் விண்கல் 16 தொடக்கம் 30 அடி பரப்புக் கொண்டது என்றும் இது பூமியை தாக்க வந்தால் வளிமண்டலத்திலேயே சிதைந்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.