சீனாவில் திடீர் என்று மீண்டும் அதிகரித்து வரும் கொரோனாவால் பல பயணம் தொடர்பான தடைகளை மற்றும் கட்டுப்பாடுகளை ஏனைய நாடுகள் விடுத்து வரும் நிலையில் இங்கிலாந்தின் புதிய அறிக்கை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது
சீனா பயணிகள் இங்கிலாந்து வரும் பயணிகள் புறப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் பரிசோதனை எடுக்கப்பட்ட, அதில் கொரோனா பாதப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என்று கடந்த வாரம் இங்கிலாந்து அரசு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் சீனாவில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள், கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வர வேண்டும் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் கொரோனா உறுதியானாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் அல்லது சுயமாக தனிமைப்படுத்த உத்தரவிடப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.