கடந்த சில நாட்களாக பல ஊடக பேசுபொருளாக சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமை மாறியுள்ளது. எனவே உண்மை தன்மையை வெளிப்படுத்த கூறி உலக சுகாதார மையம் (WHO ) வேண்டுகோள் விடுத்துள்ளது.
சீனாவில் கொரோனா விடுகை போராட்டங்களை மக்கள் மேற்கொண்டதை அடுத்து கடந்த மாதம் 7 ஆம் திகதி கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டது . இதனை தொடர்ந்து சீனாவில் கொரோனா பரவல் அதிகரிக்கத்தொடர்ந்ததுடன் மரணிக்கும் மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது. இவ்வாறு தகவல் வெளியாகி உள்ள போதிலும் இதனை சீனா அரசுஅதனை மறுத்து வருகின்றது.
அதனால் இன்று உலக சுகாதார மையம் உண்மை தன்மையை வெளிப்படுத்துமாறு சீனாவுக்கு வேண்டுகோளை விடுத்துள்ளது.