நாசா புதிது புதிதாக பல ஆராய்ச்சிகளை வெளியிட்டு வரும் நிலையில் சூரியன் தொடர்பில் பல வருட காலமாக பல விதமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
சூரியனை நெருங்க கூட முடியாது அத்தகைய வெப்பநிலை அங்கு நிலவுகிறது என்று கூறப்பட்ட நிலையிலும் அதை பல வழிகளில் நெருங்கி இன்று அதை பற்றிய பல வினோத தகவலை வெளியிட்டு வருகிறது . அந்தவகையில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் அதனை படம்பிடித்து வருகிறது . 2022 ஆகஸ்ட் 12 முதல் டிசம்பர் 22 வரை 133 நாட்கள் சூரியனின் இயக்க நிலையை எடுத்து அதனை வெளியிட்டுள்ளது.
இத்தகைய காணொளியை எடுப்பதனால் சூரியனை பற்றி மட்டுமின்றி ஏனைய நட்சத்திரங்களை பற்றிய ஆய்வுகளை செய்வதற்கும் இது உதவியாக இருக்கும் என நாசா கூறியுள்ளது .