தலிபான்கள் 1996 – 2001 வரை முகமது உமார் தலைமையில் ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகத்தை ஆட்சி செய்தார்கள். 2001 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தாக்கினார்கள்.
எனவே இவர்கள் மீது அமெரிக்கா படையெடுத்து அடிசி அதிகாரத்தை பறித்தது பின் 31 ஆகஸ்டு 2021 அன்று முழுவதுமாக வெளியேறிவிடுவதாக கூறியது அமெரிக்கா தனது துருப்புக்களை ஆப்கானிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் நேரத்தில், 15 ஆகஸ்டு 2021 அன்று காபூலின் வீழ்ச்சிக்குப் பின்னர் தாலிபான் படைகள் காபூல் நகரத்தின் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டது.
ஆப்கானிஸ்தானில் இன்று தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு தடைகளை கொண்டு வந்துள்ளனர்.
இதற்கிடையே குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் சமீபத்தில் அறிவித்தனர். கசையடி, கை, கால் துண்டிப்பு, மரண தண்டனை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
திருடிய குற்றத்துக்காக 4 பேரின் கைகளை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கந்தகாரில் உள்ள கால்பந்து மைதானத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் திருட்டு உள்ளிட்ட குற்றசாட்டப்பட்ட 9 பேரை அழைத்து வந்து 39 முறை கசையடி அளிக்கப்பட்டது. பின்னர் திருட்டு குற்றத்துக்காக 4 பேரின் கைகளை வெட்டி துண்டித்தனர்.
இதேபோல் பல்வேறு குற்றத்துக்காக பலருக்கு கசையடி உள்ளிட்ட தண்டனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்ற தண்டனைகளுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.