அண்மைக் காலமாக பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், மீண்டும்.பாகிஸ்தான் – ஈரான் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.பலூசிஸ்தானின் பஞ்கூர் எல்லை பகுதியில் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கான்வாய் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘தெஹ்ரிக் இ தாலிபன் பாகிஸ்தான்’ தீவிரவாத அமைப்பு நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இதை போல போன வருடம் டிசம்பர் மாதம் ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கிராமம் சரவண். இங்கு ஈரான் பாதுகாப்புப் படை வீரர்கள் வழக்கம்போல் தங்களது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி இருந்தமை குறிப்பிட்ட வேண்டிய விடயமாகும் .