ரஷ்யா முன்னாள் அதிபரும், பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வடேவ் உக்ரைனில் ரஷ்யா தோற்கடிக்கப்பட்டால் அணு ஆயுதப்போர் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவும் அமெரிக்காவும், மிகப் பெரிய அணுசக்தி வல்லரசுகள் என்றும், உலகின் 90 சதவீத அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்த டிமிட்ரி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் புடின் இறுதி முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.
தன்னையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க ரஷ்யா அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்றும் டிமிட்ரி மெட்வடேவ் தெரிவித்தார்.