தீவிரமாகும் பருவநிலை மற்றம், உலகுக்கு பாரிய அச்சுறுத்தலாக உள்ளதாக சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளுக்கு, சிங்கப்பூர் நிதிப் பங்களிக்குமா என பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.
குறித்த கேள்விக்குப் பதிலளித்த நீடித்த, நிலைத்தன்மை மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலக சனத்தொகையில் பாதிப் பேர் பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
“அத்துடன், கடல்நீர் மட்டம் அதிகரிப்பதால் சிங்கப்பூர் மற்றும் மாலைதீவு போன்ற சிறிய நாடுகள் பாதிக்கப்படக்கூடும். தகுந்த நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அவை, கடலில் மூழ்கிவிடும்” என்றும் அமைச்சர் எச்சரித்தார்.
பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளுக்கு, நிதி வழங்குவது குறித்த பரிசீலனைகளை முன்வைக்க அமைக்கப்பட்ட இடைக்காலக் குழுவுடன் சிங்கப்பூர் இணைந்து பணியாற்றவிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.