இங்கிலாந்தில் முன்பள்ளி பராமரிப்புச் செலவுகள் முன்னைய ஆண்டுகளை விடவும் அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான முழு நேர முன்பள்ளிக்கு ஓர் ஆண்டுக்கு 15,000 ஸ்டெர்லிங் பவுண்ட் செலவு செய்யப்படுவதாக, தொண்டு நிறுவனமான Thomas Coram Foundation for Children அறிக்கையிட்டுள்ளது.
இந்த செலவுத் தொகை கடந்த ஆண்டிலும் பார்க்க 5.9% உயர்வடைந்துள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், முன்பள்ளிகளுக்கான போதிய இடம்பற்றாக்குறை நிலவுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, குழந்தை பராமரிப்புச் செலவுகளைக் கொண்ட குடும்பங்களுக்கு உதவ கடந்த 05 ஆண்டுகளில் 20 பில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் செலவிட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.