செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இளவரசர் ஹரி – மேகன் பிள்ளைகளுக்கு அரச அந்தஸ்து

இளவரசர் ஹரி – மேகன் பிள்ளைகளுக்கு அரச அந்தஸ்து

0 minutes read

2020 ஆம் ஆண்டு முதல் அரச குடும்பத்தில் இருந்து விலகி வாழ்ந்து வரும் இளவரசர் ஹரி – மேகன் தம்பதியரின் பிள்ளைகளுகான அரச அந்தஸ்தை, பக்கிங்காம் மாளிகை வழங்கியுள்ளது.

இதுவரை காலமும் அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹரி – மேகன் தம்பதியரின் பிள்ளைகள், செல்வன் ஆர்ச்சி, செல்வி லிலிபெட் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இனி அவர்கள் பெயர்கள் இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லிலிபெட் என மாற்றம் செய்யப்படும் என பக்கிங்காம் மாளிகை தெரிவித்துள்ளது.

ஹரி – மேகன் பிள்ளைகள், சிம்மாசனத்தின் வரிசையில் ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள் : ஃபிராக்மோர் வீட்டிலிருந்து வெளியேறும் ஹரி?

வித்தியாசமாக உணர்கிறேன் – ஹரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More