பிரான்ஸில் ஊழியர்கள் அதிகாரபூர்வமாக ஓய்வுபெறும் வயதெல்லையை 64ஆக உயர்த்துவதற்கு செனட் சபை உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர்.
இதற்காக நடந்த வாக்கெடுப்பில் 201 பேர் ஆதரவாகவும் 115 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோனின் (Emmanuel Macron) ஓய்வூதியச் சீர்திருத்தத் திட்டங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாக இது கருதப்படுகிறது.
ஓய்வூதியச் சீர்திருத்தங்களை, இந்த மாத இறுதிக்குள் நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று அந்நாட்டு அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.
பிரான்ஸில் ஊழியர்கள் அதிகாரபூர்வமாக ஓய்வுபெறும் வயதெல்லை தற்போது 62ஆக உள்ளது.