அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கடும் மழை காரணமாக அங்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கெர்ன்வில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
அத்துடன், அங்கு காணப்படும் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
வீதிகளில் மழைநீர் தேங்கிக் கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் மற்றும் நிவாரணப் பணிகளை கலிஃபோர்னியா மாகாண அரசு முன்னெடுத்துள்ளது.