செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா நாட்டு நாட்டு பாடலை பிரதமர் மோடியும் வாழ்த்தினார்

நாட்டு நாட்டு பாடலை பிரதமர் மோடியும் வாழ்த்தினார்

1 minutes read

ஆஸ்கர்2023

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, இன்று (13) நடைபெற்றது. இதில் இந்தியாவின் ‘The Elephant Whisperers’ என்கிற ஆவணப்படம் மற்றும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

பிரதமர் மோடி வாழ்த்து

இவற்றுக்கு இந்தியப் பிரதமர் மோடி, ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ்க்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் மோடி கூறியதாவது: “‘நாட்டு நாட்டு’ புகழ் உலகளாவியது. இன்னும் பல வருடங்கள் நினைவில் நிற்கும் பாடலாக இது இருக்கும். ஆஸ்கர் விருதை வென்றதற்கு, இந்தியா பெருமிதம் கொள்கிறது”, என்றார்.

மேலும், சிறந்த ஆவணப் படத்துக்கான ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ படக்குழுவுக்கு பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதைப்பற்றி, “இயற்கையோடு இயைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ படம் அற்புதமாக உணர்த்துகிறது”, என்று பிரதமர் புகழ்ந்துள்ளார்.

இந்திய சினிமாவின் வெற்றி – நடிகர் ராம் சரண்

இதேவேளை, “நாட்டு நாட்டு” டலுக்கு கிடைத்த ஆஸ்கர் விருதை எங்கள் வெற்றியாக பார்க்கவில்லை. இந்திய சினிமாவின் வெற்றியாக கருதுகிறேன் என்று நடிகர் ராம் சரண் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி – ஆஸ்கர் வென்ற கீரவாணி, கார்த்திகிக்கு ரஜினி வாழ்த்து

அது குறித்து நடிகர் ராம் சரண், அமெரிக்க செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

“ரஷ்யாவுடன் போர் தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன் உக்ரைனின் கீவ் அரண்மனையில் நாட்டு நாட்டு பாடலை படமாக்கினோம்”. நாங்கள் படமாக்கியதிலேயே “நாட்டு நாட்டு” பாடல்தான் மிகவும் கஷ்டமாக இருந்தது என்றும் நடிகர் ராம் சரண் கூறியுள்ளார்.

raamcharan

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More