கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியை இரண்டாவது முறையாக சூறாவளி தாக்கியதில் குறைந்தது 100 பேர் உயிரிழந்து உள்ளனர். பலரைக் காணவில்லை.
இதனையடுத்து, அப்பகுதியில் தேடல் மற்றும் மீட்புப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அசம்பாவிதத்தை அடுத்து, மலாவியின் தென் பகுதியில் பேரிடர் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மலாவி நாட்டை Freddy என்று பெயர் வைக்கப்பட்டுள்ள சூறாவளி தாக்கத் தொடங்கியதிலிருந்து பாரிய அசம்பாவிதங்கள் அங்கு பதிவாகியுள்ளன.
கடந்த மாதத்தில் வலுவிழந்த Freddy சூறாவளி, இப்போது வலுவடைந்து பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், சூறாவளி இன்று அல்லது நாளையிலிருந்து படிப்படியாக குறையும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.