இங்கிலாந்தின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸை சிறப்பிக்கும் வகையில் முதன்முறையாக அவரது உருவத்தைப் பிரதிபலிக்கும் சிறப்பு தபால் முத்திரைகளை Royal Mail வெளியிடவுள்ளது.
தோட்டத்தில் காணப்படும் பூக்களைக் கொண்ட தொகுப்பில் அவருடைய நிழல் தோற்றம் இடம்பெறும் என BBC தெரிவித்துள்ளது.
மன்னர் தோட்டக்கலையில் அதிக ஈடுபாடுடையவர் என்பதைக் காட்டவே மலர்கள் பயன்படுத்தப்பட்டதாக Royal Mail தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு மன்னரின் தோற்றம் தெரியும் வகையில் வெளியிடப்படும் முதல் தபால் முத்திரை இதுதான்.
காலஞ்சென்ற எலிசபெத் மகாராணியின் நிழல் தோற்றம் 1968ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு தபால் முத்திரையாக பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.