அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிகான் வேலி (Silicon Valley)வங்கி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதில் வைப்புத்தொகை வைத்திருந்த பொதுமக்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றன.
இது தவிர, நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட Signature வங்கியும் தற்போது மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கி நெருக்கடி தற்போது கட்டுக்குள் இருப்பதாக நாட்டு மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை அளித்துள்ளார்.
சிலிகான் வேலி வங்கியில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும், வரிசெலுத்துவோருக்கு எந்த இழப்பும் ஏற்படாது என்றும், வங்கிகள் வைப்புத்தொகை காப்பீட்டிற்குந் செலுத்தும் கட்டணத்தில் இருந்து பணம் வரும் என்றும் பைடன் கூறியிருக்கிறார்.
தொடர்புடைய செய்தி – அமெரிக்காவில் மற்றுமொரு வங்கியும் மூடப்பட்டது