நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய அரியலூர் மாணவி ‘அனிதா‘ கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி மனவிரக்தியில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
அவரது மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சுமார் 22 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, அரியலூர் அரச மருத்துவக் கல்லூரியின் அரங்கிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அண்மையில் ‘அனிதா’ என்ற பெயரை
சூட்டியுள்ளார்.
குறித்த நினைவு அரங்கம் சுமார் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.