பாரிஸ் நகரம் தற்போது குப்பைகளால் நிரம்பி வழிகின்றது.
சுற்றுலா நகரங்களில் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸுக்கு தனியிடம் உண்டு. ஆனால், பாரிஸ் நகரின் நடைபாதைகளில் தற்போது 6,600 டன் குப்பைகள் நரம்பியுள்ளன.
குப்பைகளைச் சேகரிக்கும் நகர மன்ற ஊழியர்கள் கடந்த சில நாட்களால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாலேயே, பாரிஸ் நகரத்துக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னும் 5 நட்களுக்கு அதாவது எதிர்வரும் 20ஆம் திகதி வரை இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நீடிக்கும் எனக் கூறப்படுகின்றது.
தொடர்புடைய செய்திகள் – ஓய்வூதிய கொள்கைக்கு எதிராக பிரான்ஸில் போராட்டம்
பிரான்ஸில் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 57 இருந்து 59 அதிகரிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சம்பள உயர்வு கேட்டும் பல துறைகளைச் சார்ந்தோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, 2024 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், மேற்குறித்த போராட்டங்கள் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதிலும் சிக்கல்கள் தோன்றியுள்ளன.