கின்னஸ் சாதனைப் புத்தகத்தில், இந்தியா – கர்நாடக மாநிலத்திலுள்ள ஹுப்பள்ளி ரயில் நிலையம் இடம்பிடித்துள்ளது.
உலகில் மிக நீளமான நடைமேடையை கொண்ட ரயில் நிலையமாகவே, ஹூப்பள்ளி ரயில் நிலையம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
கின்னஸ் அமைப்பு, ஹூப்பள்ளி ரயில் நிலைய நடைமேடையின் நீளத்தை கடந்த ஜனவரி 12ஆம் திகதி கணக்கிட்டுள்ளது.
அதன்படி, 1,507 மீட்டர் நீளம் கொண்ட இந்த நடைமேடையை பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் திறந்து வைத்தார்.
இதையும் பாருங்க – நோபல் பரிசைப்பெற தகுதியானவர் மோடி
சுமார் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த நடைமேடை, அதிகரித்து வரும் ரயில்களின் தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமேடை, ஒரே நேரத்தில் இரு திசைகளில் இருந்து இரண்டு ரயில்கள் வரவோ அல்லது புறப்பட்டு செல்லவோ உதவுகிறது என்று தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.