Amazon நிறுவனம், கடந்த ஜனவரி மாதம் 18,000 பணியாளர்களைக் குறைத்தது.
இந்நிலையில், மேலும் 9,000 பணியாளர்களை ஆட்குறைப்புச் செய்யவிருப்பதாக Amazon நிறுவனம் அறிவித்துள்ளது.
இது பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு டிசெம்பர் மாதம் Amazon நிறுவனத்தில் சுமார் 1.5 மில்லியன் பேர் வேலை செய்தனர்.
நிச்சயமற்ற பொருளியல், எதிர்காலம் ஆகியவற்றால் செலவுகளையும் ஊழியர்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடிவெடுத்துள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜஸ்ஸி (Andy Jassy) தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக் காலத்தின் போது பலரும் Online வணிகத்தை நாடியதால் Amazon பெரும் வளர்ச்சி கண்டது.
எனினும், தற்போது அந்நிலைமை மாறியுள்ளது. இதனால் Amazon நிறுவனத்தில் பணிபுரியும் மனிதவளம், விளம்பரம், Twitch காணொளி விளையாட்டு நேரலைச் சேவை முதலியவற்றில் வேலை செய்யும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.