சீனாவின் மீது மேற்குலக நாடுகளும் பல குற்றச் சாட்டுகளை தொடர்ச்சியாக முன்வைத்துள்ள நிலையில் இப்போது ஐநா மனித உரிமைக்குழுவும் புதிய குற்றத்தை முன்வைத்துள்ளது.
தெற்காசியாவில் ஆக்ரமிப்பு மூலமாக தனது எல்லையை விரிவுபடுத்தும் சீனாவின் நோக்கம், ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா.மனித உரிமைக் குழுவின் 52வது கூட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே சீனா விரிவாக்கத் திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெற்காசிய ஆய்வுகளுக்கான ஐரோப்பிய பவுண்டேசன் அமைப்பின் இயக்குனர் ஜூனைத் குரேஷி சுட்டிக் காட்டினார்.
பூட்டான், இந்தியா போன்ற அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினைகளில் சீனா வன்முறையைக் கையாள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை, பாகிஸ்தான், மாலத்தீவுகள் போன்ற நாடுகளின் பொருளாதாரத் தேவையைப் பயன்படுத்தி கடன் வலை விரிப்பதன் மூலம் அந்நாடுகளின் இறையாண்மையை சீனா மீறுவதாகவும் குரேஷி தெரிவித்துள்ளார்.