லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அண்மையில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதன் எதிரொலியாக, லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்காக அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புதுடெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கான இல்லம் ஆகியவற்றுக்கும் அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி : இந்திய உயர் ஸ்தானிகராலய தாக்குதலுக்கு கண்டனம்
லண்டனிலுள்ள இந்திய தூதரக பாதுகாப்பு குறைபாடு விடயத்தில் மத்திய அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மத்திய லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வெளியே பொலிஸார் குவிக்கப்பட்டு, லண்டன் பெருநகர பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.