கனடாவில் இரண்டு எட்மண்டன் அதிகாரிகளை சுட்டுக் கொன்ற சிறுவன் ரோமன் சோல்டன் ஷேவ்சுக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
16 வயது சிறுவன் “மிகவும் பதற்றத்தில் இருந்தான்” என்றும் போராடிக் கொண்டிருப்பது போல் இருந்ததாக ஒரு குடும்ப நண்பர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் எட்மண்டன் கான்ஸ்டபிள்களான டிராவிஸ் ஜோர்டான் (35) மற்றும் பிரட் ரியான் (30) ஆகியோர் உயிரிழந்தனர்.
ஷேவ்சுக்கின் தாயார் கத்யா நோட் (55), இந்த மோதலின் போது சுடப்பட்டார். அதிகாரிகள் மற்றும் அவரது தாயாரை சுட்டுக் கொன்ற பிறகு, ஷேவ்சுக் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்தார் என்று கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழன் நள்ளிரவுக்குப் பிறகு சம்பவம் நடந்ததிலிருந்து அதிகாரிகள் தகவல்களை மறைத்து வைத்துள்ளனர்.
எனினும், தற்போது குடும்பத்தைப் பற்றிய விவரங்கள் மெதுவாக வெளிவரத் தொடங்கியுள்ளன.
நீதிமன்றப் பதிவுகள், துப்பாக்கிச் சூடு நடந்த வடமேற்கு எட்மண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் மற்றும் குடும்பத்தினரின் நண்பர்களுடனான நேர்காணல்கள் மூலம், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் அவரது தாயார் ஆகியோரின் அடையாளங்களை, அந்நாட்டு ஊடகமொன்று உறுதிப்படுத்தி வெளியிட்டுள்ளது.