ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து (Queensland) மாநிலத்தில் புதிய வகை சிலந்தியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெரிய சிலந்தி வகையைச் சேர்ந்த இந்தச் சிலந்தி, மிக அரிதாகவே காணப்படுகின்றது. எனவே, அதைப் பாதுகாப்பது மிக முக்கியம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தச் சிலந்தி முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அப்போது போதிய தகவல்கள் இல்லாததால் அதை வகைப்படுத்த இயலவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அது குறித்த ஆராய்ச்சி, 2017ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்தே, ஆஸ்திரேலியா – குவீன்ஸ்லந்து மாநிலத்தில் இந்தப் புதிய வகை சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.