தென்கொரிய பெண் ஒருவர், தனது 960ஆவது முயற்சியில் தனது சாரதி அனுமதிப்பத்திர தேர்வில் தேர்ச்சி பெற்றதுடன், அவர் தனது உரிமத்தைப் பெற 11,000 பவுண்டுக்கும் அதிகமாக செலவழித்துள்ளார்.
69 வயது சா சா-சூன் (Cha Sa-soon)என்ற இப்பெண், 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்முறையாக சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான எழுத்துபூர்வத் தேர்வை எழுதினார்.
எனினும், அதில் அவர் தேர்ச்சி பெறாத நிலையில், பின்னர் அந்தத் தேர்வைத் தினமும் வாரத்தில் 5 நாள்களுக்கு மீண்டும் மீண்டும் எழுதினார்.
3 ஆண்டுகளுக்குத் தொடர்ந்த மொத்தம் 780 முயற்சிகளுக்கு பின்னர் வாரத்துக்கு இருமுறை தேர்வை எழுதி வந்தார். ஒரு வழியாகத் தேர்ச்சியும் பெற்றார்.
அடுத்த செய்முறைத் தேர்வில் 10 முயற்சிகளுக்குப் பிறகு தேர்ச்சி பெற்று சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றார்.
தமது காய்கறி விற்பனை வியாபாரத்துக்கு ஓட்டுநர் உரிமம் தேவைப்பட்டதால் அவர் முயற்சியைக் கைவிடவில்லை என்று Mirror நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சா சா சூனின் முயற்சிகள் அவரை ஒரு பிரபலமாகவே ஆக்கிவிட்டமை குறிப்பிடத்தக்கது.