அமெரிக்காவின் நியூயார் நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஆபாச நடிகராக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
33 வயதான கிரிகோரி ஏ. லாக் என்ற நபர், பகலில் நீதிபதியாகவும் இரவில் ஆபாச நடிகராகவும் இருந்து உள்ளார்.
தனது ஒன்லி பேன்ஸ் என்ற செனலில் ரசிகர்களிடம் மாதம் 987 ரூபாய் ($12) வசூலித்து வந்த அவர், அதில் 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை பதிவு செய்துள்ளார்.
சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருக்கும் கிரிகோரி, ‘நான் ஒரு நீதிபதி’ என்றும், காலையில் ஒரு வெள்ளை காலர் நிபுணர் என்பதுடன், இரவில் தொழில்சார்ந்தவர் எனக் கூறியுள்ளார்.
மேலும், கிரிகோரி தன் சுய அறிமுகத்தில் ‘முதிர்ச்சியற்றவர், முரட்டுத்தனமான, ஆபாசமானவன் ‘ என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம், நியூயார்க் அதிகாரிகளால் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அவர் நீதிபதி பதவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.