இலங்கை, மாலைதீவு, நேபாளம், மொரிசீயஸ், எகிப்து மற்றும் பூடான் உள்ளிட்ட சுமார் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதாக, அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “2015ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆண்டு வரை 2,059 கோடி ரூபாய்க்கு இந்தியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
“அதனுடன் ஒப்பிடுகையில், 7 மடங்கு அதிகமாக கடந்த 2022 தொடக்கம் தற்போது வரை சுமார் 13, 399 கோடி ரூபாய்க்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.